பெற்றோர் வீட்டில் இருந்த குஷ்பு நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை! கணவர் வெளியூரில் வசித்த போது எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் பெற்றோர் வீட்டில் வசித்தபடி மருத்துவராக பணிபுரிந்த திருமணமான இளம்பெண் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பலரம்பூரை சேர்ந்தவர் குஷ்பு சிங். இவருக்கும் புனீத் என்பவருக்கும் கடந்த 2013ல் திருமணம் நடந்த நிலையில் 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

மருத்துவரான குஷ்பு சொந்த ஊரிலேயே அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

அவர் கணவர் புனீத் மும்பையில் வசித்து வந்தார். மேலும் மனைவி மற்றும் குழந்தைகளை வந்து அடிக்கடி பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் பெற்றோருடன் உட்கார்ந்து இரவு உணவு சாப்பிட்ட குஷ்பு பின்னர் தனது மகனை அழைத்து கொண்டு தனது அறைக்கு தூங்க சென்றார்.

இதையடுத்து நள்ளிரவில் குஷ்புவின் மகன் அழுது கொண்டே தனது தாத்தா, பாட்டியிடம் ஓடி வந்து தாய் குறித்து எதோ கூற முயன்றார்.

இதனால் பதற்றமடைந்த குஷ்புவின் பெற்றோர், மகள் அறைக்கு சென்ற போது அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குஷ்பு ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், குஷ்பு அறையில் இருந்து கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அவருக்கும், புனீத்துக்கும் எந்தவொரு சண்டையும் இல்லை எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குடும்பத்தாரிடம் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்