சபரிமலை ஐயப்பன் மாலை: இவர்கள் கையால் மட்டுமே அணிய வேண்டும்

Report Print Printha in ஆன்மீகம்
129Shares
129Shares
lankasrimarket.com

கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். அதனால் இந்த மாதத்தில் முதல் நாள் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை மேற்கொள்கின்றனர்.

அதாவது இந்த கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, மார்கழி மாதத்தில் 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

இவ்வாறு மாலை அணிந்து செல்லும் போது, அந்த மாலையை அவரின் தாயார் அல்லது குரு சுவாமியின் கையால் அணிந்து கொள்வது மிகவும் நல்லது.

அதிலும் முதல் முக்கியத்தும் தாயாருக்கு மட்டுமே உள்ளது. ஒருவேளை தாய் இல்லாதவர்கள் அவர்களின் குருசாமி கையினால் மாலையை அணிந்துக் கொள்ள வேண்டும்.

இதை தவிர்த்து, பலரும் மாலையை ஒரு கோவிலில் அணிந்து கொண்டு, வேறொரு கோவிலில் களைக்கிறார்கள் அல்லது தானாகவே வீட்டில் வைத்து களைத்து கொள்கிறார்கள். இந்த முறைகள் அனைத்தும் மிகவும் தவறானது.

மாலை அணிந்த பின் என்ன செய்ய வேண்டும்?
  • ஐயப்ப மாலை அணிந்த பின் கடுமையான பிரம்மசர்ய விரத்தை கடைபிடிக்க வேண்டும்.
  • விரத நாட்களில் காலை மற்றும் மாலை தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
  • தினமும் குளித்த பின் ஐயப்பனை தொழுது, ஐயப்பன் பாடல்களை பாட வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்