நீண்ட நாள் திருமண தடையுடைய மகர ராசியினரே! இதோ திருமண தடை நீக்கும் பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்

செவ்வாய் மற்றும் இராகு கேது தோஷத்தால் திருமண தடைவுள்ளவர்களும் மகர ராசிக்கே உரிய வழிபாட்டு சூட்சும யோகநேரம் உள்ளது.

மகரராசிக்காரர்கள் திருமணத்தடை அகன்று திருமணயோகம் பெற கீழ் கூறப்பட்டுள்ள வழிபாட்டு முறைகளை பின்பற்றினாலே போதும்.

  • முதலில் திருமணயோகம் பெரும் நபரின் ராசிக்கே வழிபாட்டைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  • திருமணயோகம் பெரும் நபரே வழிபாட்டைத் தொடங்குவது அவசியமாகும்.
  • சிவ ஆலயத்திற்கு திங்கட்கிழமை மகரராசிக்கு யோகம் தரும் நேரமாகிய மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஆலயத்திலுள்ள கன்னி மூல கணபதியை வணங்கி பின்பு முருகன் வள்ளி தெய்வானையை வணங்க வேண்டும்.
  • நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரபகவானுக்கும் சுக்கிரபகவானுக்கும் பசுநெய் தீபம் ஏற்றி நவக்கிரகங்களை 9 முறை வலம்வந்து மூலவராகிய சிவபெருமானையும் அம்பாளையும் 7 வாரங்கள் தொடர்ந்து வழிபட வேண்டும்.
  • வழிபாடு துவங்கும் முதல் வாரமும் கடைசி வாரமும் மூலவராகிய சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும்.
  • நவக்கிரக மேடையில் விளக்கேற்றும் வசதி இல்லை என்றால் கோவிலில் உள்ள பொது விளக்கேற்றும் மேடையில் தீபம் ஏற்றிக்கொள்ளவும்.
  • குடும்பத்தில் ஒரு பரிகார வழிபாடு செய்யும் போது வழிபாட்டு வாரம் முடிந்தபின் தேவை என்றால் அடுத்த பரிகார வழிபாட்டைத் தொடங்கலாம்.
  • கோவிலுக்குப்போகும் நாட்களில் மட்டும் மது, மாமிசம் தவிர்க்க வேண்டும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers