துரதிர்ஷ்டங்களை அனைத்தையும் போக்க வேண்டுமா? இதோ எளிய பரிகாரம்

Report Print Kavitha in ஆன்மீகம்

மனிதனாக பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டம் என்பது எளிதில் கிடைக்காத ஒன்றாகும். ஆனால் துரதிர்ஷ்டம் எம்மை எப்போழுதுமே தூரத்தி கொண்டிருக்கும்.

இதிலிருந்து விடுபட தாந்திரீகத்தில் ஒரு பரிகார முறை ஒன்று கூறப்படுகின்றது.

வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்பட்டிருப்பவர்கள், தொடர்ந்த துரதிர்ஷ்டங்களை அனுபவிப்பவர்களுக்காக இந்த பரிகார முறை செய்ப்படுகின்றது.

தற்போது அதனை எப்படி செய்வது, என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.

பரிகாரம்

முதலில் ஒரு பௌர்ணமி அன்று நல்ல தரமான தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து கொள்ளுங்கள்.

அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றி, பின்னர் அத்தேங்காயை கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும், வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றிக் கொள்ளவும்.

சுற்றி முடித்த பின்பு ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் கழற்றி விட்டு அந்நீர்நிலையில் வெறும் காலுடன் இறங்கி “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்கிற மந்திரத்தை 11 தடவை ஜெபித்து, காக்கும் கடவுளாகவும், செல்வங்களை அருள்பவராகவும் இருக்கும் மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம், துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விட்டு வீடு திரும்ப வேண்டும்.

பலன்கள்

இந்த தாந்திரீக பரிகார முறையை முறையாக செய்பவர்களின் வீட்டில் வளங்கள் ஏற்படும்.

வீண் செலவுகள் ஏற்படாது. வீட்டை பீடித்திருக்கும் தரித்திர நிலை சீக்கிரத்தில் நீங்குவதை காணலாம்.

வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நிம்மதியான உணர்வை பெறுவார்கள். அனைவருக்கும் மன மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers