வரப்போகும் சக்தி வாய்ந்த சூரிய கிரகணத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன தெரியுமா?

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்

வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் வரும் 21-ம் தேதி நிகழ்கிறது.

கிரகணம் என்பது வானில் தோன்றக்கூடிய இயற்கையின் அதிசய நிகழ்வு .சூரியன், சந்திரன்,பூமி இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வருவதை இந்த கிரகண காலம் என்று கூறுவார்கள்.

அதிலேயும் சூரியனை சந்திரன் மறைக்கக்கூடியதாக இருப்பதுதான் சூரிய கிரகணம்.இந்த சூரிய கிரகணம் மிக நீண்ட சூரிய கிரகணம்.

குறிப்பாக நெருப்பு வளைய சூரிய கிரகணமாக அமையப்போகிறது.இது மிகவும் ஆற்றல் பொருந்திய ,வலிமையான சூரிய கிரகணமாக இருக்கப்போகிறது.

இத்தகைய கிரகண நாளில் என்னெல்லாம் செய்யவேண்டும்,செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.மேலும் இதில் நிறைய அறிவியல் காரணங்களும் உள்ளன.

தர்பையை அனைத்து பொருட்களிலும் போட்டு வைக்கவேண்டும்.தர்பை விஷ முறிவாக செயல்படும் புல்.

குடிக்கப்பயன்படுத்தும் தண்ணீரில் கூட தர்பையை போட்டு வைக்கவேண்டும். இந்த கிரகணத்தை வெற்றுக்கண்களில் பார்க்கக்கூடாது. வெளியில் செல்லக்கூடாது.

கர்ப்பிணிகள்

மிகவும் கவனமாக இருக்க வேண்டியவர்கள். கர்பஸ்திரிகள் தர்பையை தங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சம் படாமல் இருக்கும் அறையில் இருக்க வேண்டும்.

கிரகணத்தின் போது சாப்பிடாமல் இருப்பது மிகவும் சிறந்தது. ஆனால் கர்பிணிகள் சாப்பிடாமல் இருப்பது கொஞ்சம் சிரமம். ஆகவே நீங்கள் நீர் ஆகாரங்களையும்,பழங்களையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணிகள் கிரகணம் ஆரம்பிக்கும் போதும், கிரகணம் முடிந்த பிறகும் 2 முறையும் குளிக்க வேண்டும்.

இந்த கிரகண நேரத்தில் கர்பஸ்திரிகள் அவர்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருந்தால் பிறக்கும் குழந்தை ஆற்றல் பொருந்திய குழந்தையாக பிறக்கும்.

செய்யவேண்டியவை
  • கிரகண நேரம் போன்ற அருமையான நேரம் கிடைக்கவே கிடைக்காது எதற்கு என்று பார்த்தால் வழிப்பாட்டிற்கு.
  • வழிபாட்டிற்கு உகந்த காலங்களில் சிறந்த காலம் இந்த கிரகண காலம்.
  • இந்த நேரத்தில் எந்த வழிபாடு செய்தாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் கிடைக்கும்.
  • கிரகணம் முடிந்த பின் குளித்துவிட்டு மட்டுமே சாப்பிட வேண்டும்.
  • அவ்வாறு குளிக்கும்போது குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து குளிக்க வேண்டும்.
  • கல் உப்பு சேர்த்து குளித்தால் நமக்கே தெரியாமல் நம் உடலில் சூரிய வெளிச்சம் பட்டிருந்தால் அந்த ஆற்றல் உடலில் இருந்து நிவர்த்தி ஆகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்