இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம்..அதிபர் சிறிசேனா அறிவிப்பு

Report Print Santhan in இலங்கை

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அமலுக்கு வருகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அடுத்தடுத்து வெடித்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால், இதுவரை 207- பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்துள்ள 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் இந்த தாக்குதல் நடத்தியது குறித்து எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காததால், இதன் பின்னணியில் இருப்பது யார் என்ற குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன, இலங்கையில் நேற்று பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலை தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்,

மேலும் அவர், தற்கொலை தாக்குதல் நடத்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்களும் என்றும் அவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அதிபர் சிறிசேனா, இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

அவசர நிலை பிரகடனத்தை அடுத்து, ஊடகங்கள், அரசியல் கட்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு, அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டுவர அவசரநிலை பிரகடனம் என அவர் விளக்கமளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி முப்படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்