290 உயிர்களை பலிகொண்ட இலங்கை குண்டுவெடிப்பு! விசாரணை குழு அமைப்பு

Report Print Kabilan in இலங்கை

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரணை குழு ஒன்றை அந்நாட்டின் ஜனாதிபதி சிறிசேனா அமைத்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில், நேற்றைய தினம் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பங்களில் 290 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் இதுவரை 24 பேரை இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த, சிறப்பு விசாரணை குழுவை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.

AFP

இந்த விசாரணைக் குழு உச்சநீதிமன்ற நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் பொலிஸ் ஐ.ஜி, என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்டதாகும்.

அத்துடன், இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி, இரு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்