இலங்கையில் 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட தாக்குதல்: அம்பலமான தகவல்கள்

Report Print Deepthi Deepthi in இலங்கை

இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர், 500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே பயங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவர்களிடம் இருந்து வெடிகுண்டுகளை எடுத்து செல்ல பயன்படுத்திய வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேன் ஓட்டுநர் தான் தாக்குதல் நடந்த இடங்களுக்கு வெடிகுண்டுகளை எடுத்து சென்றுள்ளார். மேலும், தாக்குதலில் உயிர்சேதம் அதிகம் இருக்க வேண்டும் என இவர்கள் திட்டமிட்டு, அதிக மக்கள் கூடும் இடங்களை தெரிவு செய்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்