இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய பேராலயம்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல்

Report Print Arbin Arbin in இலங்கை
1106Shares

இலங்கையில் தற்கொலைப்படை தீவிரவாதி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தை இலக்கு வைத்ததாகவும், அது கைகூடாமல் போனதாலையே சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர் உமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில்,

ஏப்ரல் 20 ஆம் திகதி சென் மேரிஸ் பேராலயத்தைச் சுற்றி நோட்டமிட்டுத் திரிந்ததை அங்குள்ள பங்குத்தந்தை ஒருவர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி ஈஸ்டர் ஆராதனையை அவர் பகல் 7 மணிக்கு ஆரம்பிக்குமாறு திட்டமிட்டு முன்னெடுத்துள்ளார்.

இதனால் ஈஸ்டர் ஆராதனையானது பகல் 8 மணியளவில் முடிவடைந்துள்ளது. இவ்வேளையில் தீவிரவாதி உமார் 8.30 மணியள்வில் மேரிஸ் பேராலயம் நோக்கி சென்றுள்ளார்.

ஆனால் அப்போது அங்கு மக்கள் கூட்டம் இல்லாதது கண்டு, ஏமாற்றமடைந்த உமார் 50 மீற்றர் தொலைவில் இருந்த சியோன் தேவாலயம் நோக்கி நகர்ந்துள்ளான்.

அங்கு தன்னை பாஸ்டர் கணேசமூர்த்தி திருக்குமாரன் என அடையாளப்படுத்தியே உள்ளே நுழைந்திருக்கிறான்.

சியோன் தேவாலயத்தில் அப்போது தான் வழிபாடுகள் ஆரம்பித்திருக்கின்றன. அங்கு அவன் காலை 9 மணியளவிலேயே குண்டுகளை வெடிக்கவைத்துள்ளான்.

இதில் 14 இளைஞர்கள் உட்பட இதுவரை 30 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

210 ஆண்டுகள் பழமையான சென் மேரிஸ் பேராலயத்தில் ஈஸ்டர் ஆராதனைக்கு சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

சென் மேரிஸ் பேராலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தால் உயிரிழப்பு பலமடங்கு அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்