இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்

Report Print Basu in இலங்கை
1550Shares

இலங்கையில் குளியாபிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, ரஸ்னாயகபுர, கோபிசானே உட்பட நாடு முழுவதும் ஊடரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

நேற்று குயிலிபிட்டிய பகுதியில் உள்ள முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் குளியாபிட்டிய பொலிசார் சிலரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அடுத்து அப்பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கோரி குளியாபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு பெரிய கூட்டம் கூடியுள்ளது.

இதனையடுத்து, குயிலிபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் இராணுவம் ஈடுப்பட்டது. மேலும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.

எனினும், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் மீண்டும் குளியாபிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, ரஸ்னாயகபுர, கோபிசானே உட்பட நாடு முழுவதும் நாளை காலை 4 மணி வரை ஊடரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்