இயல்பு நிலைக்கு திரும்பியது இலங்கை... சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம்

Report Print Basu in இலங்கை

இலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக மே 13ம் திகதி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதித்தது இலங்கை அராங்கம்.

இதனையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது நாட்டில் அமைதியான சுழல் நிலவி வரும் நிலையில் அதன் விளைவாக நான்கு நாட்களுக்கு பிறகு சமூக வலைதளங்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்