இலங்கை தேர்தலில் தோல்விக்கு பின்னர் சஜித் பிரேமதாச வெளியிட்ட உருக்கமான அறிக்கை

Report Print Raju Raju in இலங்கை

இலங்கை தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறேன் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இலங்கை தேர்தலில் இலங்கை பொது ஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாச தோல்வியடைந்த நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள கோத்தபாய ராஜபக்சவை பாராட்டுகிறேன், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன், எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி.

கடந்த 26 ஆண்டுகளாக நான் இலங்கையில் அரசியல்வாதியாக உள்ளேன், அந்த சமயத்தில் மக்களுக்கு தொண்டு செய்ய பெரிதும் பாடுபட்டேன்.

கட்சியின் பிரதி தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்,எனினும் மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றுவேன் என தெரிவித்துள்ளார்.


மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்