ஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை படைத்த உச்சகட்ட சாதனை... மொத்தம் எத்தனை சதவீதம்?

Report Print Santhan in இலங்கை

இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணிகை முடிவில் 83.72 சதவீதம் ஓட்டு பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதன் பின் நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில், பொது ஜன முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்றார்.

இவர் நாளை பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடை பெற்று முடிந்தவுடன் 80 சதவீதம், 82 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், மொத்தம் 83.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தான் கடந்த ஜனாதிபதி தேர்தல்களை விட அதிக வாக்குகளை பெற்ற தேர்தல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results