கொள்ளையடிக்க சென்ற இடத்தில் மதுவில் மூழ்கிய திருடன்: சுற்றி வளைத்த பொலிசார்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து நாட்டில் கொள்ளையடிக்க சென்ற இடத்தில் திருடன் ஒருவன் வெளியேற முடியாமல் மதுவில் மூழ்கியதால் அவனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சுவிஸில் உள்ள St. Gallen நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இன்று நள்ளிரவு 2 மணியளவில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளான்.

அப்போது, வளாகத்தில் வைத்திருந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் மதுபாட்டில்களை திருடி மூட்டை கட்டியுள்ளான்.

ஆனால், அங்கிருந்து வெளியேறாமல் திடீரென ஒரு விஸ்கி பாட்டிலை திறந்து முழுவதுமாக குடித்துள்ளான்.

பின்னர், மதுபோதையில் வளாகத்தில் இருந்து வெளியேற வழி தெரியாததால் உள்ளே சிக்கியுள்ளான்.

அதிகாலை நேரம் ஆனதும் வளாகத்திற்குள் ஒருவர் விழுந்து கிடப்பதை கண்ட நபர் ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

தகவல் பெற்ற பொலிசார் இரண்டு ரோந்து வாகனங்களில் சென்று உள்ளே சிக்கியிருந்த நபரை கைது செய்தனர்.

நபரிடம் இருந்த பொருட்களை பொலிசார் கைப்பற்றினர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜோர்ஜியா நாட்டை சேர்ந்தவர் என்றும் வளாகத்திற்குள் கொள்ளையடிக்க வந்ததாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments