பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை அடித்து விரட்டிய மதுபான விடுதி

Report Print Kabilan in சுவிற்சர்லாந்து

சுவிஸில் மதுபான விடுதி ஒன்றில், இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு ஏற்பட்டுள்ளது.

ஆனால், விடுதி காவலர்கள் அந்த பெண்ணிற்கு உதவுதற்கு பதிலாக, புகார் செய்த அந்த பெண்ணையே வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவஸில் Laura எனும் இளம்பெண் ஒருவர், தனது தோழிகளுடன் சேர்ந்து Kornhausplatz என்னும் நகரில் உள்ள Cuba-Bar என்னும் மதுபான விடுதி ஒன்றிற்கு கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளார்.

கழிவறைக்கு சென்ற Lauraவை மர்ம நபர் ஒருவர், அவரை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். Laura அந்த நபரை அடித்துள்ளார். மேலும், கூச்சலிட்ட Lauraவை அந்த நபர் பலமாக தாக்கியுள்ளார்.

இதனால் Lauraவிற்கு மூக்கு உடைந்து ரத்தம் வெளியேறியது. பின்னர் அங்கிருந்து தப்பி வந்த Laura, விடுதியின் காவலாளிகளிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

ஆனால், அவர்களோ அந்த பெண் கூறுவதைக் கூட சரியாக கேட்காமல், அவரை விடுதியை விட்டு வெளியேற்றி விட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தவறு செய்த நபரை Lauraவிடம் மன்னிப்பு கோர செய்துள்ளனர். இதனால், Laura எந்த புகாரும் அந்த நபர் மீது பொலிஸில் அளிக்கவில்லை.

மறுநாள் பத்திரிக்கை செய்தியில் பார்த்த பிறகு தான், காவலாளிகள் தனியாக இரவுநேர Partyயை ஏற்பாடு செய்திருந்தது, விடுதி நிர்வாகத்தினருக்கு தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்