சுவிஸ்சில் முருகப் பெருமானின் விடைமுறம் திருப்பெருநாள் கொண்டாட்டம்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
43Shares

விரிசடை ஞானலிங்கப்பெருமான் கழகம் கண்ட தமிழ் உருவான கடவுள் முருகப் பெருமானின் விடைமுறம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விடைமுறத் திருப்பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அனலாக முருகன் திருவிறங்கி வந்தான்.

சுவிற்சர்லாந்து பேர்ன் மாநிலத்தில் தமிழ்வழிபாட்டுத் திருக்கோவிலில் விடைமுறத் திருநாளில் பால்குடங்கள் எடுத்தும், அனல்சட்டிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாளை தமிழ் ஒலிக்க நிறைவாகக் கொண்டாடினர்.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில விண்மீன்கள் இறைவனுக்கு உகந்தவையாகும், இறைவன் திருவிறங்கி வந்த விண்மீன்களாகவும் இவை கருதப்படுகின்றது.

இவ்வகையில் விடைமுறம் (வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம்) வடிவேலனது நாள்மீனாக அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விடைமுறத்தில் (விசாக தினத்தன்று) விரிசடை கடவுளையும், தமிழ் வேலனையும் வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.

அள்ளிக்கொடுப்பதற்கு பன்னிரு கரங்கள் கொண்ட தெய்தத் தமிழ் தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். ஈழத்தில் வேலன் மகன் தமிழை நாட்டினான்.

அப்பன் கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத்தெரிய கொஞ்சித் தமிழால் பகன்ற தமிழன், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றுவன், சூரனை போராடி வெற்றிகொண்ட ராவுத்தன் முருகக்கடவுள். இப்பெருமான் ஞானாம்பிகை பாலன் விழா பெருவிழாவாக ஞானலிங்கேச்சுரத்தில் நோற்கப்பட்டது.

ஞானலிங்கேச்சுரத்தில் பன்னிருகை வேலவனை எண்ணி பலநூறு தமிழர்கள் திரடண்டனர். எங்கும் தமிழ் ஒலிக்க ஓங்கரனா பெருமான் வள்ளி தெய்வானை உடன் எழுந்து திருவுலாவந்த காட்சி பேரின்பமாக அமைந்தது.

முருகருசி சிவலிங்கம் சுரேஸ்குமார் சிறப்பு வழிபாடுகளை தமிழில் நெறிப்படுத்தினார், அவர் தன் உரையில் வடிவேல் முருகனை தமிழால் வழிபடஅற்புதப் பலன்கள் கிடைக்கும். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும், மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான் என்றுரைத்தார்.

விடைமுறம் அறிவிற்குரிய நாள்மீனாகும். ஆக இந்நாட் பால் குடம் எடுத்து முருகனை வணங்கிய உங்கள் அனைவருக்கும் ஞானமும், கல்வியும் பெருகும், கொடுமைகள் நீங்கும் , பகை விலகும், துன்பம் நீங்கும், குலம் தழைத்து ஓங்கும், அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என நல்லாசி வழங்கினார்.

“வேலை” வணங்குவதே வேலையாக கொண்ட தமிழினம், உலகம் முழுவதும் துன்பமில்லாது வாழ முருப்பெருமான் வேல் வந்து பொதுப்பகை எதிர்நிற்க வேண்டும் எனும் எண்ணம் முன்நிற்க, விடைமுறத் திருநாள் வழிபாடுகள் ஞானலிங்கேச்சுரத்தில் நிறைவுற்றன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்