புகலிடம் மறுக்கப்பட்டோரின் குழந்தைகள் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்: அதிர்ச்சித் தகவல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
194Shares
194Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் நாடுகடத்தப்படுவதற்குமுன் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளவர்களில் ஐந்தில் ஒருவர் சிறையில் அடைக்கப்படுவதாகவும் சில நேரங்களில் தங்கள் பெற்றோருடன் குழந்தைகளும் சிறையில் அடைக்கப்படுவதாகவும் நாடாளுமன்றக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக இவ்வாறு நடைபெறுவதாக தேசிய கவுன்சிலின் கட்டுப்பாட்டுக் குழு கூறியுள்ளது.

இது தவறு என்றும் அவ்வாறு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதை சட்டமியற்றுபவர்கள் சுட்டிக் காட்டவேண்டும் என்றும் கமிட்டி தெரிவித்துள்ளது.

புகலிடம் மறுக்கப்பட்ட பெண்கள் தலைமறைவாகிவிடக்கூடாது என்பதற்காக சிறையில் அடைக்கப்படும்போது அவர்களுடன் அவர்களுடைய குழந்தைகளும் அடைக்கப்படுகிறார்கள்.

நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்காததால், எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணிக்கை சரியாக தெரியவில்லை என்று கமிட்டியின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட சிறுவர் உரிமை அமைப்பான Terre des hommes இந்த அறிக்கையை வரவேற்றுள்ளதோடு சிறையில் வைக்கப்படுவதே குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடிய விடயம் எனும்போது இளம் புலம்பெயரும் குழந்தைகளுக்கு அது அதிபயங்கரமான அனுபவம் என்றும் தெரிவித்துள்ளது.

கமிட்டி கூறியதைப் போலவே, தாங்களும் குடும்பங்களை சிறையில் அடைப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் அவ்வளவுதான் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

1997ஆம் ஆண்டின் சிறுவர் உரிமை மாநாட்டின் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்குமாறு அது சுவிட்சர்லாந்தை வற்புறுத்தியுள்ளது. அரசு இந்த அறிக்கைக்கு பதிலளிக்க செப்டம்பர் மாத இறுதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்