இந்தோனேஷிய எரிமலையில் சிக்கிய சுவிஸ் சுற்றுலாப்பயணிகள்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
72Shares
72Shares
ibctamil.com

இந்தோனேஷிய எரிமலை ஒன்றைக் காண சுற்றுலா சென்ற சுற்றுலாப்பயணிகள் பலர் அப்பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

Mount Rinjani என்பது Lombok என்னும் இந்தோனேஷியத் தீவிலுள்ள எரிமலைக் குழம்பு உருகிய நிலையிலிருக்கும் ஒரு எரிமலையாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த எரிமலையின் அடிவாரத்தினருகில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் அந்தப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் அப்பகுதியிலிருந்து மக்கள் தப்பி வரும் வழிகள் அடைக்கப்பட்டன.

இதனால் எரிமலைக் குழம்பு உருகிய நிலையிலிருக்கும் அந்த எரிமலைப் பகுதியில் 13 சுவிட்சர்லாந்துக் குடிமக்கள் உட்பட பல சுற்றுலாப்பயணிகள் சிக்கிக் கொண்டனர்.

சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புக் குழுக்களும் ஹெலிகொப்டர்களும் அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில் இச்சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதோடு 160 பேர் காயமடைந்துள்ளனர்.

அதிர்ஷடவசமாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சுவிஸ் நாட்டவர்கள் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்