அதிகரிக்கும் வெப்பநிலையால் சுவிட்சர்லாந்து நீர் நிலைகளில் ஏற்பட்டுள்ள அபூர்வ மாற்றம்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
359Shares
359Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் நீர் நிலைகளில் ஒரு அபூர்வ மாற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க விதத்தில் சூரிச் ஏரியில் இந்த அரிய மாற்றம் காணப்படுகிறது. நன்னீர் ஜெல்லி மீன்கள் பொதுவாக நீர் நிலைகளின் ஆழமான பகுதிகளில் மட்டுமே வாழும். அவை நீர் நிலையின் மேற்பரப்புக்கு வருவதில்லை.

மேலும் அவை மிகவும் சிறிய அளவிலேயே இருக்கும். ஆனால் தற்போதுள்ள வெப்பநிலை அதிகரிப்பு இந்த நன்னீர் ஜெல்லி மீன்களில் இரண்டு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்று அவை அளவில் பெரிதாகியுள்ளன. இரண்டு அவை தற்போது தண்ணீரின் மேற்பரப்பை நோக்கி வரத் தொடங்கியுள்ளன.

இந்த குறிப்பிட்ட வகை ஜெல்லி மீன்கள் விஷமற்றவை, அவற்றால் கொட்டவும் முடியாது ஆகவே அவற்றால் ஆபத்து ஒன்றும் இல்லை என்றாலும், நீந்துபவர்களுக்கு அவை இடைஞ்சலாக உள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்