சுவிஸ்ஸில் மரச்சுத்தியலால் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்: பெற்றோரின் உருக்கமான வேண்டுகோள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
310Shares
310Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில் இளைஞரை கொடூரமாக கொலை செய்த நபர் விடுதலையான சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளனர்.

டிசினோ மாகாணத்தில் வியட்நாம் நாட்டவரான குடும்பம் ஒன்று குடியிருந்து வருகிறது. இவர்களது 17 வயது மகன் Boi கடந்த 2009 ஆம் ஆண்டு கிறிஸ் வி என்பவரால் மரச்சுத்தியலால் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கிறிஸ், சம்பவம் நடந்தபோது தண்டனைக்குரிய வயதை எட்டாததால், கடந்த 2013 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

தற்போது தண்டனைக் காலம் முடிவடைந்து கிறிஸ் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.

குறித்த தகவலை அறிந்த Boi-ன் பெற்றோர், கிறிஸ் இனிமேலும் இதுபோன்ற கொடூர குற்றங்களை செய்யாமல் இருப்பார் என நம்புகிறோம் என்றனர்.

மட்டுமின்றி, வியட்நாம் நாட்டில் கொலை குற்றவாளிக்கு 20-ல் இருந்து 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

ஆனால் நாங்கள் தற்போது சுவிஸ்ஸில் குடியிருந்து வருகிறொம், இங்குள்ள நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்