மூன்றாவது முறையாக சாதனை படைத்துள்ள சுவிஸ் மலை ரயில்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள மலை ரயில் நிலையம் ஒன்று மூன்றாவது முறையாக மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் Junfraujoch ரயில்பாதை 1912ஆம் ஆண்டு போடப்பட்டது.

அந்த பாதை போடப்பட்ட முதலாண்டிலேயே 42,000 சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து சாதனை படைத்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான ரயில் நிலையமான Jungfraujoch ரயில் நிலையத்திற்கு 1,067,000 சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளார்கள்.

பொதுவாக பனிச்சறுக்கு விளையாட்டிற்காகவே சுற்றுலாப்பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம் என்பதால், இம்முறை பனி குறைவாக இருந்ததால் பிரச்சினை இருக்கும் என்பதற்காக செயற்கையாக பனி உருவாக்கப்பட்டு அங்கு கொட்டப்பட்டது.

பனி குறைவாக இருந்ததால் கடந்த ஆண்டு பனிச்சறுக்கு விளையாடுவதற்காக மட்டும் மலை ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.9 சதவிகிதம் குறைந்தது.

ஆனாலும் ஐரோப்பாவின் உயரமான ரயில் நிலையத்தை சுற்றிப்பார்க்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள் ரயில் போக்குவரத்தை விரும்பியதையடுத்து 2017ஆம் ஆண்டு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை 2.4 சதவிகிதம் உயர்ந்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers