சுவிட்சர்லாந்தில் பிறந்த பிஞ்சு குழந்தையை தாயார் ஒருவர் கொடூரமாக கொன்று பொம்மைக்குள் மறைவு செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் மண்டலத்தில் இளம் தாயார் ஒருவரே தமக்கு பிறந்த இரு குழந்தைகளை கொன்று மறைவு செய்துள்ளவர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளம் பெண் ஒருவர் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.
அவரது நிலையை உணர்ந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது 20 வயதான குறித்த இளம் பெண் தமது குடியிருப்பில் வைத்து இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார்.
கழிவறையில் வைத்து முதல் குழந்தையை பெற்றெடுத்த அவர் அதை கொடூரமாக கொலை செய்து பொம்மை ஒன்றுக்குள் வைத்து புதர் மட்டியப்பகுதியில் மறைவு செய்துள்ளார்.
தொடர்ந்து குடியிருப்புக்குள் சென்ற அவருக்கு சில மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனையடுத்து கடும் உதிரப்போக்குடன் சுயநினைவை இழந்துள்ளார்.
குடும்பத்தினர் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார்,
அவரது குடியிருப்பின் கழிவறையில் இருந்து பிஞ்சு குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக ஒரு குழந்தை பிறந்ததாகவும், அதை கொலை செய்து பொம்மைக்குள் வைத்து மறைவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இரண்டாவதும் பிள்ளை பெற்றெடுப்பேன் என தெரியாமல் போனது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறப்பட்டிருந்தால் இரண்டாவது குழந்தை பிழைத்திருக்கும் என மருத்துவர்கள் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை முதல் லூசெர்ன் மண்டல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் இந்த வழக்கில் குறித்த பெண்மணி மீதான குற்றச்சாட்டு நிரூபண்மானால் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.