சுவிஸில் அடுக்குமாடி குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம்!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தீக்கிரையான அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் மண்டலத்தின் Gümligen பகுதியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்துள்ளது.

சுமார் 2.10 மணியளவில் கிடைத்த இந்த தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருடன் இணைந்து கொழுந்துவிட்டெரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கடும் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு குழுவினர், பின்னர் மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த குடியிருப்புக்குள் நுழைந்தனர்.

இந்த நிலையில் அந்த குடியிருப்புகளில் ஒன்றில் இருந்து பெண்ணின் சடலத்தை மீட்பு குழுவினர் கண்டுள்ளனர்.

மரணமடைந்தவரின் அடையாளம் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ள அதிகாரிகள், ஆனால் அவர் தொடர்பில் தகவல்களை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து காரணமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பானது தற்போதைய சூழலில் குடியிருப்புக்கு உகந்ததாக இல்லை என கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers