சுவிட்சர்லாந்தில் ஹேக்கர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் அரசாங்கம் தங்கள் மின்னணு வாக்களிப்பு அமைப்பில் உள்ள குறைபாடுகளை கண்டுபிடிக்கும் ஹேக்கர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹேக்கர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, சுவிஸ் மின்னணு வாக்களிப்பு அமைப்புக்குள் நுழைய முயற்சி செய்யலாம்.

ஃபெடரல் அரசாங்கம் காகித முறை வாக்கெடுப்பிலிருந்து மின்னணு முறைக்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்காக 250,000 சுவிஸ் ஃப்ராங்குகள் முதலீடு செய்ய உள்ளது.

ஒரு ஹேக்கரால், தான் கண்டுபிடிக்கப்படாமலே மின்னணு வாக்கெடுப்பு அமைப்பிற்குள் நுழைய முடிந்தால், அவர்களுக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்