நண்பரின் சட்டவிரோத செயலால் தண்டனை பெற்ற சுவிஸ் பெண்மணி: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் குடியிருக்கும் பெண்மணி ஒருவர் நண்பரின் போதை மருந்து பரிமாற்றத்தால் சிக்கலில் சிக்கியுள்ளார்.

பெர்ன் மண்டலத்தின் Kirchberg பகுதியில் குடியிருந்துவருபவர் குறித்த பெண்மணி. இவருடன் டொமினிக்கன் குடியரசு நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் குடியிருப்பை பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சுவிஸ் பெண்மணி சுற்றுலாவுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

பயணத்தை முடித்து சுவிஸ் திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மண்டல பொலிசார் அவரது குடியிருப்பை தலைகீழாக புரட்டிப் போட்டிருந்தனர்.

மேலும், குடியிருப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற பெட்டி ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் 235 கிராம் அளவுக்கு கோகோயின் போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த போதைமருந்தானது சுவிஸ் பெண்மணியின் குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய 8 மாத சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நன்னடத்தை சோதனை காலமாக 2 ஆண்டுகளும், குடியிருப்பு வாடகையாக அந்த நபர் வழங்கிய 500 பிராங்குகளை பெர்ன் மண்டல நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers