வெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

மருத்துவ சிகிச்சைக்கு என கூறி சுவிஸ் பெண்மணியிடம் இருந்து ருமேனியா நாட்டவர் ஒருவர் அரை மில்லியன் பிராங்குகளை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Zug நகரில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் 43 வயதான ருமேனியா நாட்டவரை சுவிஸ் பெண்மணி ஒருவர் சந்தித்துள்ளார்.

60 வயதான இவரிடம் அந்த நபர் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் இருவரும் குடும்ப விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சுவிஸ் பெண்மணியின் நம்பிக்கையை பெற்ற அந்த ருமேனிய நாட்டவர் திடீரென்று ஒரு நாள் தமது சிகிச்சைக்கு உதவ யாரும் இல்லை எனவும், அதிக தொகை தேவைப்படுவதாகவும் கண் கலங்கியுள்ளார்.

இதனால் பரிதாபப்பட்ட அந்த சுவிஸ் பெண்மணி தமது சேமிப்பில் இருந்து அந்த ருமேனியருக்கு உதவி செய்துள்ளார்.

2017 ஜனவரி மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரை குறித்த சுவிஸ் பெண்மணியிடம் இருந்து அவர் பணம் பெற்று வந்துள்ளார்.

மொத்தமாக சுமார் 525,000 பிராங்குகள் வரை சிகிச்சைக்கு என கூறி அந்த ருமேனியர் கைப்பற்றியுள்ளார்.

ஒருகட்டத்தில் சந்தேகத்திற்கு உள்ளான சுவிஸ் பெண்மணி இந்த விவகாரத்தை பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் இவரை ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்மணியிடம் இருந்து மருத்துவ செலவுக்கு என ஏமாற்றிய பணத்தை அந்த நபர் தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் அந்த நபர் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers