சுவிட்சர்லாந்தில் இளம்பெண்ணை சீரழித்த வெளிநாட்டவர்: நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சூரிச் மண்டலத்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய சிரியா இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை காலம் முடிந்த பின்னர் அவரை 15 ஆண்டுகளுக்கு நாடுகடத்தவும் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குறித்த 32 வயது சிரியா நாட்டவர், கடந்த 2018 செப்டம்பர் மாதம் சூரிச்சில் உள்ள மாவட்டம் 4-ல் குடியிருப்பு ஒன்றில் புகுந்துள்ளார்.

அப்போது அந்த குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்துள்ளார்.

அவரை மிரட்டி, சீரழித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அந்த சிரியா நாட்டவர்,

தமது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், வேளைக்கு ஒரு காரணம் கூறி விசாரணையை முடக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் சாடியங்களும் ஆதாரங்களும் அவருக்கு எதிராக நிரூபணமான நிலையில், அந்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், தண்டனை காலம் முடிவடைந்த பின்னர் நீண்ட 15 ஆண்டுகளுக்கு அவரை நாட்டில் இருந்து வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மட்டும் குறித்த நபர் மீது 11 குற்றவியல் வழக்குகள் பதிவாகி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,

கடந்த மே மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், அடுத்த சில மாதங்களில் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இவர் இத்தாலி மற்றும் ஜேர்மனியிலும் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்