தீக்கிரையான வாகனம்: உடல் கருகிய நிலையில் சுவிஸ் ஆணின் சடலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Fribourg பகுதியில் தீக்கிரையான வாகனத்தில் இருந்து உடல் கருகிய நிலையில் மீட்கபட்ட சடலம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Fribourg-ன் Matran நகராட்சியில் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது வாகனம் ஒன்று தீ விபத்தில் சிக்கியுள்ளதை காண நேர்ந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

நெருப்பில் முற்றாக சேதமடைந்த அந்த வாகனத்தின் உள்ளே இருந்து பொலிசார், உடல் கருகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கபட்ட நபருக்கு 62 வயது இருக்கலாம் எனவும், அப்பகுதியில் குடியிருக்கும் நபராக இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த கார் தீப்பிடித்து எரிய என்ன காரணம் எனவும், இது கொலை முயற்சியா உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்