கோழிக்குஞ்சுகளை உயிருடன் அரைத்து கொல்வதற்கு தடை: சுவிஸ் அரசு ஆதரவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கோழிக்குஞ்சுகளை உயிருடன் அரைத்து கொல்வதற்கு தடை விதிப்பதற்கு சுவிஸ் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது!

சுவிஸ் நாடாளுமன்றம் கோழிக்குஞ்சுகளை உயிருடன் அரைத்து கொல்வதற்கு தடை விதிப்பதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக பிரபல சுவிஸ் பத்திரிகையாகிய 20 Minutes செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது கோழிகள் மட்டுமே முட்டையிடும் என்பதால், முட்டையிடும் கோழிகளைத்தவிர சேவல்கள் அனைத்தும் கொல்லப்பட்டுவிடும்.

இந்த பழக்கம் சுவிட்சர்லாந்தில் அதிக அளவில் பயன்பாட்டில் இல்லை என்றாலும், அதை தடை செய்வது அர்த்தமுள்ளதுதான் என அரசு ஆணையம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு, அதிவேகத்தில் சுழலும் பிளேடுகள் உள்ள இயந்திரங்களை பயன்படுத்தி கோழிக்குஞ்சுகளை அழிப்பதற்கு அனுமதி உள்ளது.

அப்படி இல்லையென்றால், சில கோழிக்குஞ்சுகள் உறுப்புகளை இழந்தும் உயிருடனேயே மிஞ்சிவிடும்.

இதற்கிடையில், மக்கள் முட்டைகளை பயன்படுத்துவதையும், சேவல்களை உண்ணுவதையும் அதிகரிப்பதன்மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்கிறார் Isabelle Chevalley என்னும் நாடாளுமன்ற உறுப்பினர்.

கோழிக்குஞ்சுகளை அரவை இயந்திரத்தில் போட்டு கொல்லும் முறையை தடை செய்வதற்கான சட்டம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது.

கோழிக்குஞ்சுகள் குப்பை அல்ல என்னும் தலைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு மனுவைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்