ராஜினாமா செய்த முன்னாள் அதிகாரியை உளவு பார்த்த சுவிஸ் வங்கி: வெடித்த பிரச்னை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் வங்கி ஒன்றிலிருந்து சில பிரச்னைகள் காரணமாக அதிகாரி ஒருவர் வெளியேற, அவரை மற்றொரு அதிகாரி உளவு பார்த்துள்ளார்.

இந்த பிரச்னை பெரிதாகி வங்கியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் சூழல் உருவானது.

Credit Suisse என்னும் சுவிட்சர்லாந்தின் பிரபல வங்கியில் முக்கிய பொறுப்பாற்றியவர் Iqbal Khan.

Khan தனது மேலதிகாரியான Tidjane Thiamஇன் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு வீடு வாங்கி அதை இரண்டு ஆண்டுகளாக புதுப்பித்திருக்கிறார்.

இந்நிலையில் அவரது மேலதிகாரியான Thiam வீட்டில் ஒரு பார்ட்டி நடக்கும்போது, தங்கள் வீட்டுக்கருகில் மரங்கள் நட்டதாக Thiamஇன் காதலி எல்லோர் முன்னிலையிலும் Khanஇடம் சண்டை போட்டிருக்கிறார்.

இதை சக அலுவலர்கள் அனைவருமே பார்த்திருக்கிறார்கள்.

இந்த பிரச்னைக்கு பிறகு Khan தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, போட்டி வங்கியான UBS வங்கியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

அப்போது தன்னை தொடர்ந்து சிலர் பின் தொடர்வதை கவனித்திருக்கிறார் Khan. தன்னை பின் தொடர்ந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தன்னை கண்காணிப்பதற்காக தனது முன்னாள் அலுவலகமான Credit Suisseஆல் அமர்த்தப்பட்டவர்கள் என்பது Khanக்கு தெரியவந்துள்ளது.

இந்த பிரச்னை பெரிய அளவில் வெடிக்க, Credit Suisse வங்கியின் பெயர் பாதிக்கப்படும் நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

எனவே, உடனடியாக Credit Suisse வங்கி, Khanஐ பின் தொடர்ந்ததன் பின்னணியில் இருப்பது யார், Khan முந்தைய அலுவலகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி அங்குள்ளவர்களை UBS வங்கிக்கு இழுக்க முயன்றாரா என்பது தொடர்பாக விசாரிப்பதற்காக சட்ட நிறுவனம் ஒன்றை ஏற்பாடு செய்தது.

அந்த நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் Khanஐ பின் தொடர்வதற்கு ஆட்களை ஏற்பாடு செய்தது Tidjane Thiam அல்ல, Credit Suisse வங்கியில் chief operating officer என்னும் பொறுப்பில் இருக்கும் Pierre-Olivier Bouée என்பது தெரியவந்தது.

தன் மீதான குற்றச்சாட்டைத் தொடர்ந்து Pierre-Olivier Bouée தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் அந்த விசாரணை நிறுவனம், Khan முந்தைய அலுவலகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி, அங்குள்ளவர்களை UBS வங்கிக்கு இழுக்க முயற்சிக்கவில்லை என்பதையும் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்