ஜேர்மன் துப்பாக்கிச் சூடு எதிரொலி: சுவிஸ் நிர்வாகம் முன்னெடுத்த அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

ஜேர்மனியில் யூத தொழுகைக்கூடம் அருகே முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக சுவிட்சர்லாந்தில் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு பாதுகாப்பை அதிகரிக்க சுவிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்காலத்தில் சுவிஸில் குடியிருக்கும் சிறுபான்மையினர் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆண்டுக்கு 500,000 பிராங்குகள் வரை செலவிடவும் சுவிஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதனால் கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கான ஆதரவு சாத்தியமாகும் என சுவிஸ் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது தொடர்புடைய அவசர சட்டம் ஒன்றை பெடரல் கவுன்சில் புதன்கிழமை நிறைவேற்றியது, அதை வியாழனன்று அறிவித்துள்ளது.

இந்த அவசர சட்டமானது எதிர்வரும் நவம்பர் 1-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் இந்த அவசர சட்டத்தின் அடிப்படையில் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய சமூகம் மீது அதிக அக்கறை செலுத்தப்படும் எனவும்,

சுவிஸ் மீதும் அதன் கலாச்சாரம் மீதும் ஒருங்கிணைந்து செல்கிறார்களா என்பது தொடர்பிலும் கண்காணிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் அரசியல் ஆதாயம் தேடுதல், மதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எப்போதும் எந்த ஆதரவும் நிர்வாக ரீதியாக வழங்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வன்முறையை தூண்டும் நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஆதரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுவிஸ் நிர்வாகம் ஒருபோதும் ஆதரிக்காது எனவும் சுட்டிக்காட்டியுள்லனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்