என்னைக் கொல்லத் துணிந்த தந்தை... சுவிஸ் இளைஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் 17 வயது இளைஞரை சொந்த தந்தையே கத்தியால் தாக்கி கொலைவெறி தாக்குதல் முன்னெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டம் காரணமாகவே அந்த தாக்குதலில் இருந்து தாம் நூலிழையில் உயிர் தப்பியதாக கூறும் அந்த இளைஞர், தற்போது தமது குடும்பத்திடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஈராக்கிய நாட்டவரான அந்த நபர் பெர்ன் மண்டலத்தில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அவர் தமது மகன், ஒருபாலின ஈர்ப்பாளர் என்ற தகவலை அறிந்து கொதித்துப் போயுள்ளார்.

இதில் கடும் கோபம் கொண்ட அவர் சம்பவத்தன்று தமது 17 வயது மகன் மீது கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் அவர் படுகாயங்களுடன் நூலிழையில் உயிர் பிழைத்துள்ளார். இதனிடையே அண்டைவிட்டாரின் தகவலை அடுத்து விரைந்து வந்த மண்டல பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருந்தாலும், அவரது தொண்டை கடுமையாக காயம்பட்டிருந்தது.

இதனையடுத்து சிகிச்சையின் ஒரு பகுதியாக இளைஞரை கோமா நிலையில் வைத்துள்ளனர்.

தற்போது, சம்பவம் நடந்து சுமார் 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இளைஞர் புதிய வாழ்க்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

காயங்கள் தமக்கு மனதளவில் வலியை ஏற்படுத்தினாலும், அதில் இருந்து மீண்டுவர நிபுணர்களின் உதவியை நாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இளைஞரின் தந்தை தற்போது பொலிசாரின் பிடியில் உள்ளார்.

மட்டுமின்றி, தமக்கு நேர்ந்த இந்த துயரம் தமது தாயாரை மிகவும் பாதித்தது என கூறும் அவர், குறித்த சம்பவத்திற்கு பின்னர், வாழ்க்கை முன்பு இருந்தது போல இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்