வீட்டிலேயே மின்சார சைக்கிள் தயாரித்த நபர்: கிடைத்த பரிசு?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வீட்டிலேயே தயாரித்த மின்சார சைக்கிள் ஒன்றை சாலையில் ஓட்டி வந்த ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

சூரிச்சிலுள்ள Winterthur நகரில், ஒருவர் தானே வீட்டிலேயே தயாரித்த மின்சார சைக்கிளை ஒய்யாரமாக சாலையில் ஓடிவந்தார்.

ஒரு புதிய கண்டுபிடிப்பாளரைப்போல புகழ் பெறுவோம், பரிசும் பாராட்டும் கிடைக்கும் என்று பார்த்தால் பொலிசார் அவரை கைது செய்துவிட்டார்கள்.

அந்த 33 வயது நபர் வெறுமனே சைக்கிளை ஓட்டி வரவில்லை, போதையிலும் இருந்துள்ளார். அவரது சைக்கிளை பறிமுதல் செய்த பொலிசார், வீட்டில் தயாரிக்கப்பட்ட மின் சைக்கிள்களுக்கு சாலையில் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

அதற்கான காரணம், அந்த சைக்கிள்களை பதிவு செய்யவோ அவற்றிற்கு காப்பீடு செய்யவோ முடியாது.

அந்த சைக்கிளை மேலதிக சோதனைகளுக்காக அனுப்பியுள்ள பொலிசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்