சுவிஸ் நாட்டவரை திகிலடைய வைத்த சிலந்தி: காரணம் இதுதான்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் மெக்கானிக் ஒருவர் கார் ஒன்றை பழுது பார்த்துக்கொண்டிருக்கும் போது, அவர் மீது தாவிய சிலந்தியைக் கண்டு அதிர்ந்தார்.

Thugau மாகாணத்தைச் சேர்ந்த Martin Tuchschmid, பொதுவாக சிலந்திகளுக்கு பயப்படாதவர்.

ஆனால் இந்த சிலந்தி அவருக்கு திகிலூட்டியதன் காரணம், அது சாதாரணமாக சுவிட்சர்லாந்தில் காணப்படும் சிலந்தி வகையைச் சேர்ந்தது அல்ல.

மஞ்சள் நிறத்தில், குண்டாக, உடல் முழுவதும் உரோமங்களுடன், தனது கையளவு பெரியதாக காணப்பட்ட அந்த சிலந்தி அவர் கை மீது தாவியதும், தன்னையறியாமல் பின்னோக்கி துள்ளிக் குதித்து, அந்த சிலந்தியை உதறித் தள்ளிவிட்டிருக்கிறார் அவர். அந்த சிலந்தி False Wolf என்ற வகையைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த சிலந்தியைக் குறித்த முக்கிய விடயம் என்னவென்றால், அது மத்திய தரைக்கடல் நாடுகளில் காணப்படும் ஒரு சிலந்தி வகையைச் சேர்ந்ததாகும்.

அதாவது புவி வெப்பமயமாதலால் உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஒரு அடையாளமாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.

அந்த சிலந்தி, சீதோஷ்ண மாற்றங்களால் மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

False Wolf வகை சிலந்திகள் நச்சுத்தன்மை கொண்டவை அல்ல என்றாலும், அவை கடித்தால் மனிதர்களுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடியவை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்