ஒவ்வொரு நாளும் நரகம்... சுவிஸ் ஹொட்டல் உரிமையாளரால் சீரழிக்கப்பட்ட வெளிநாட்டு இளம் பெண்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட இளம் பெண்களை ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாக்கிய விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது.

கிரேக்க நாட்டவரான அந்த ஹொட்டல் உரிமையாளர் தம்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

கடந்த 2013 முதல் 2017 வரையான காலகட்டத்தில் குறித்த 63 வயது கிரேக்க நாட்டவர் தமது ஹொட்டலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பணிக்காக அமர்த்தியுள்ளார்.

சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்ட இவர்களுக்கு குறைவான ஊதியத்தையே அவர் வழங்கி வந்துள்ளார்.

மிகவும் பரிதாப நிலையில் உள்ள அவர்களின் வாழ்க்கை சூழலை தமக்கு சாதகமாக குறித்த கிரேக்க நாட்டவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டுள்ளதாலும், ஏழ்மை காரணமாகவும், இவரது உளவியல் ரீதியான அச்சுறுத்தலுக்கு குறித்த பெண்கள் கட்டுப்பட்டுள்ளனர்.

இதில் மூவர் அந்த நபரால் பாலியல் ரீதியான துபுறுத்தலுக்கும் இரையாகியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், St. Gallen மாவட்ட நீதிமன்றம் அவரை குற்றவாளி என கண்டறிந்தது.

தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த அவர், தமது நிலையை விளக்கி 6 மாத சிறை தண்டனை கோரியுள்ளார்.

மேலும், இதுவரையான தமது சிறை தண்டனை காலகட்டத்திற்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என வாதிட்டுள்ளார்.

ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் இவரது கோரிக்கைகளை நிராகரித்துள்ளதுடன், அடுத்த வாரம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கில் குறித்த ஹொட்டல் உரிமையாளருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ள மூன்று பெண்களில் ஒருவர்,பல நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளதாகவும், ஆனால் உரிய ஊதியம் தர மறுத்துள்ளதகவும் தெரிவித்த அவர், ஒவ்வொரு நாளும் தமக்கு நரகமாகவே அமைந்தது எனவும், இரவுகளில் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும், இது பல நாட்கள் தொடர்ந்ததாகவும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்