கோடி ரூபாய் கொடுத்தாலும் எங்கள் கடைகளை கொடுக்கமாட்டோம்: டாவோஸ் வியாபாரிகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற உள்ள நிலையில், தங்கள் கடைகளை யாருக்கும் வாடகைக்கு கொடுக்கமாட்டோம் என உள்ளூர் வியாபாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒரு ஜப்பானிய நிறுவனம் எனது கடைக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வாடகை தருவதாக கூறியது என்கிறார், டாவோசில் துணிக்கடை வைத்திருக்கும் கேத்தரின்.

டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடப்பதையொட்டி அங்கு பல்வேறு நாட்டினர் வருகை தருவதால், அங்கு ஸ்டால் அமைக்க பேஸ்புக் முதல் HSBC வரை போட்டி போடுகின்றன.

இதனால், அவை கடை ஒன்றுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாடகை தர தயாராக உள்ளன.

BBC

இப்படி இந்த கார்பரேட் நிறுவனங்கள் அங்கு ஆக்கிரமிப்பு செய்வதால், டாவோசிலேயே வாழும் சுமார் 11,000 பேர் கடுமையாக பாதிக்கப்படுவதாக உள்ளூர் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடை வைக்கவோ, சாப்பிடவோ ஏன் ஒரு காபி குடிக்கவோ கூட அந்த காலகட்டத்தில் பிரச்சினை ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த உலகப் பொருளாதார மாநாட்டின்போது டாவோசில் எல்லாமே பணம், பணம்தான் என்று கூறும் கேத்தரின், ஆனால், எனது கடையை நானே வைத்துக்கொள்ளப்போகிறேன், இங்குள்ள மக்களுக்காக அதை பயன்படுத்தப்போகிறேன் என்கிறார்.

BBC

அவரைப்போலவே உள்ளூர் வியாபாரிகள் பலரும் பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு இம்முறை தங்கள் கடைகளை வாடகைக்கு கொடுக்கப்போவதில்லை என்கிறார்கள்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் எங்கள் கடைகளை கொடுக்கமாட்டோம் என்கிறார்கள் அவர்கள்.

BBC

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்