இத்தாலிக்கு அடுத்து அதிகப்படியாக சுவிஸில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இத்தாலிக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்தின் டிசினோ மாகாணத்தில், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கூட்டம் அலைமோதுகிறது.

அதிகாரிகள் அவர்களுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் போதுமான படுக்கைகளை ஏற்பாடு செய்ய தடுமாறிவருவதாக மூத்த சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டிசினோ மாகாணத்தில் நிலைமை பயங்கரமாக இருக்கிறது என்கிறார் சுகாதாரத்துறையின் தொற்று நோய்ப்பிரிவின் தலைவரான Daniel Koch.

மக்கள் கூட்டம் அலைமோதினாலும், டிசினோ பகுதியில் உள்ள மருத்துவமனைகள் அவர்களை திருப்பி அனுப்பிவிடவில்லை.

சுவிட்சர்லாந்தில், டிசினோ மாகாணத்தில்தான் கொரோனா தொற்று அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் 100,000 பேருக்கு 180 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இது, நாட்டின் மொத்த கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கையில் 16 சதவிகிதம், அதே நேரத்தில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 4 சதவிகிதம்தான்.

சுவிட்சர்லாந்தில் கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 3,888ஆக உயர்ந்துள்ளதாகவும், 33 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தற்போதிருக்கும் வேகத்திலேயே கொரோனா மேலும் புதிதாக மக்களுக்கு பரவும் என்றால், சுவிஸ் சுகாதாரத்துறை இம்மாத இறுதிக்குள் நிலைகுலைந்து போகவும் வாய்ப்புள்ளதாக அரசு அலுவலர் ஒருவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...