சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று: காரணம் இதுதானாம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கடந்த சில வாரங்களாக சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், எதனால் இப்படி திடீரென தொற்று அதிகரிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவுவதைக் குறித்து உலக சுகாதார மையம் எச்சரித்துவரும் நிலையில், சமீபத்திய சில வாரங்களாக சுவிட்சர்லாந்தில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

Luganoவின் மருத்துவமனை ஒன்றில் தொற்று நோயியல் நிபுணராக பணியாற்றும் Andreas Cerny, தொற்று அதிகரித்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைதான் என்கிறார்.

ஜூன் மாதம் முழுவதும், ஆங்காங்கு ஒரு சிலருக்கு கொரோனா தொற்று உருவான தகவல்கள் பதிவான நிலையில், இம்மாதம் (ஜூலை) நாளொன்றிற்கு 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 160 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் இதுதான் மிக அதிக அளவில் பதிவான தொற்று எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பல காரணங்களை முன்வைக்கிறார் Andreas Cerny. முதலாவது, அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து திரும்புவோர் கொரோனாவை இறக்குமதி செய்யும் அபாயத்தை உருவாக்குவதாக அவர் தெரிவிக்கிறார்.

சமீபத்திய சில வாரங்களாக அதிக அபாய உள்ள நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சுவிட்சர்லாந்து திரும்பினாலும், அவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள்தான் தங்கள் வருகை குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர், தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர் என்கிறார் அவர்.

இதுபோக, சமூக விலகல் விதிகளை பின்பற்றாத மதுபான விடுதிகள்... அத்துடன் நெகிழ்த்தப்பட்ட ஊரடங்கு விதிகள்... இவையெல்லாம் போக மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது என்கிறார் Cerny. அது, அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்தல்... அதிக அளவில் பரிசோதனைகள் செய்யும்போது, அதிக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்படுவதும் ஒரு முக்கிய காரணம் என்கிறார் Cerny.

ஜூன் மாத துவக்கத்தில் நாளொன்றிற்கு 3,000 கொரோனா பரிசோதனைகள் செய்தோம், ஜூலை மாத துவக்கத்தில் அது நாளொன்றிற்கு 10,000ஆக உயர்ந்துள்ளது என்கிறார் அவர்.

சமீபத்திய சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார் Andreas Cerny.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்