சுவிட்சர்லாந்து கண்டிப்பாக இதை செய்தாக வேண்டும்.. இல்லையெனில் இதுதான் கதி! எச்சரித்த முக்கிய நபர்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை அராசங்கம் கடுமையாக்க வேண்டும் என்று நாட்டின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் புதிய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கை சமீபத்தில் சுவிட்சர்லாந்து நீக்கியது, இதைத் தொடரந்து நாட்டில் புதிய கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 200-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.

இந்நிலையில், எதிர்காலத்தில் மிகவும் கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளின் தேவையைத் தடுக்க, நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வழக்குகளை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று சுவிஸ் அரசாங்கத்திற்கு விஞ்ஞான ஆலோசனைகளை வழங்கும் அமைப்பின் தலைவரான மார்ட்டின் அக்கர்மன் கூறினார்.

நாடு தொற்றுநோய்களின் அதிகரிப்பு விளிம்பில் இருப்பதாகவும், கொரோனாவின் அதிவேக வளர்ச்சியைத் தடுக்க நாம் ஆரம்பத்தில் தலையிட வேண்டும், இல்லையெனில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய ஆபத்து உள்ளது என்று அக்கர்மன் தெரிவித்தார்.

வீட்டிற்குள் முகக்கசவம் அணிவது கட்டாயமாக்கப்படுவதை ஆதரிப்பதாக அக்கர்மன் கூறினார். ஆனால், சுவிஸில் முகக்கவசம் தற்போது பொது போக்குவரத்து மற்றும் அரசியல் ஆர்ப்பாட்டங்களில் மட்டுமே கட்டாயமாக உள்ளன.

சுவிஸில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு இன்னும் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கூட்டங்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் மக்களின் அளவை மீண்டும் குறைக்க வேண்டும் என்று நுண்ணுயிரியலில் நிபுணரான அக்கர்மன் கூறினார்.

பொது நிகழ்வுகளின் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் வழக்குகளின் எண்ணிக்கையில் அதிவேகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் இடத்தில், பல தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளன என்பதைக் ஆரம்ப தரவு காட்டுகிறது என்று அவர் கூறினார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்