சுவிஸ் பெண் பற்றி விடுவிக்கப்பட்ட பிரான்ஸ் பணயக்கைதிகள் கூறிய கலங்க வைக்கும் தகவல்! கடும் கோபத்தில் அரசாங்கம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

மாலியில் பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சுவிஸ் பெண் ஒருவர் இஸ்லாமியக் குழுவால் கொல்லப்பட்டதாக சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

பணயக்கைதி ஒரு மாதத்திற்கு முன்பு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜமாஅத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் முஸ்லிமீன் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

JNIM என அழைக்கப்படும் இந்த குழு, மாலியின் அல்-கைதாவின் ஒரு பிரிவாகும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டு பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த சுவிஸ் பெண் பீட்ரைஸ் ஸ்டோக்லி கொல்லப்பட்தை சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் கண்டித்தார்.

எங்கள் சக குடிமகனின் மரணம் குறித்து நான் மிகவும் வருத்தத்துடன் அறிந்தேன் என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த கொடூரமான செயலை நான் கண்டிக்கிறேன், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.

அவர் கொல்லப்பட்டதற்கான சரியான சூழ்நிலைகள் இன்னும் தெளிவாக இல்லை என்று காசிஸ் கூறினார்.

கொலை பற்றிய தகவல்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட பிரான்ஸ் பணயக்கைதிகளிடமிருந்து அந்நாட்டு அதிகாரிகளால் பெறப்பட்டன என்று அமைச்சகம் கூறியது.

மாலியன் அரசாங்கம் கிட்டத்தட்ட 200 இஸ்லாமிய போராளிகளை கைதி பரிமாற்றத்தில் விடுவித்த சில நாட்களுக்குப் பிறகு பிரான்ஸ் பணயக்கைதிகளை கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.

கிறிஸ்தவ மதப்போதகரான ஸ்டோக்லி மற்றும் நான்கு வெளிநாட்டிரை ஜே.என்.ஐ.எம் மற்றும் அதன் கூட்டாளிகள் நான்கு ஆண்டுகளுக்கு முன் கடத்தி பணயக்கைதிகளாக வைத்திருந்தனர்.

ஸ்டோக்லி கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் மற்றவர்களின் கதி உடனடியாகத் தெரியவில்லை.

கொலை செய்யப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அவரது சடலம் குறித்து மேலும் அறிய முயற்சிப்பதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்