நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ள சுவிட்சர்லாந்து

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
7959Shares

கடுமையாக தொற்றக்கூடிய புதுவகை கொரோனா வைரஸ் ஒன்று பிரித்தானியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல நாடுகள் பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துவிட்டன.

இந்நிலையில், பிரித்தானியா மட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவிலும் இந்த கடுமையாக தொற்றக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து, அவ்விரு நாடுகளிலுமிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்தது.

அதன்படி, நேற்று நள்ளிரவிலிருந்து (20.12.2020) பிரித்தானியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை மட்டுமின்றி, சாலை, ரயில் மற்றும் கடல்வழி போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுவிட்சர்லாந்தில் இந்த புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், அது சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துவிட்டதா இல்லையா என்பது இதுவரை தெரியவரவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்