ஜனவரி இறுதிக்குள் சுவிற்சர்லாந்து அரசு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்! ஒட்டுமொத்த குடிமக்களுக்கும் விரைவில் தடுப்பூசி...

Report Print Ragavan Ragavan in சுவிற்சர்லாந்து
668Shares

சுவிற்சர்லாந்தின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இந்த மாத இறுதிக்குள் 3வது கொரோனா தடுப்பு மருந்தை அங்கீகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிற்சர்லாந்து நாட்டில் இதுவரை 495,000-க்கும் அதிகமானோர் கோரனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 318,000-க்கும் அதிகமானோர் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், 7970 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியுள்ளது.

சுவிற்சர்லாந்து அரசு கடந்த மாதம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் கூட்டாக தயாரித்த தடுப்பூசி மற்றும் மாடர்னாவின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில், பிரித்தானிய நிறுவனமான ஆக்ஸ்போர்டு /அஸ்ட்ராசெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசியை இந்த மாத இறுதிக்குள் சுவிற்சர்லாந்தின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் Swissmedic அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"எல்லாம் திட்டமிட்டபடி தொடர்ந்தால், தேவையான தரவை விரைவில் பெறமுடிந்தால், அடுத்த ஒப்புதல் முடிவு மிக விரைவாக வரக்கூடும்" என்று சுவிஸ்மெடிக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

8.6 மில்லியன் குடிமக்களைக் கொண்ட சுவிஸ், அதன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு 449 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. மேலும், சுமார் 15 மில்லியன் டோஸ்களுக்கு ஆர்டர்களைக் கொடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் இந்த ஆண்டின் இடைப்பகுதியில் இலவசமாவே தங்களுக்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்