பயங்கரவாதியுடன் வாழ இனி பழக வேண்டும்... ஐ.எஸ் ஆதரவாளருக்கு புகலிடம் அளித்த சுவிஸ்: குமுறும் பொதுமக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares

ஈராக்கிய நாட்டவரும் ஐ.எஸ் ஆதரவாளருமான நபருக்கு சுவிஸ் நிர்வாகம் புகலிடம் அளிக்க முடிவு செய்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்காவ் மண்டலத்தில் வசித்து வந்த 37 வயதான ஈராக்கிய நாட்டவர் வெசாம் தீவிர ஐ.எஸ் ஆதரவாளராகவும்,

தமது பேஸ்புக் பக்கத்தில், ஐ.எஸ் ஆதரவு கருத்துகள் கொண்ட காணொளிகளை வெளியிட்டும் வந்துள்ளார்.

இந்த நிலையில் பெடரல் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 2016ல் மூன்று ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.

தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு இந்த தண்னடை அளிக்கப்பட்டது.

மட்டுமின்றி அவரது புகலிடக் கோரிக்கை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வெசாம், தமது புகலிக் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியதுடன் புகாரும் அளித்தார்.

தற்போது அந்த புகாரின் மீது விசாரணை மேற்கொண்ட செயின்ட் கேலனில் உள்ள பெடரல் நிர்வாக நீதிமன்றம்,

வெசாமின் புகலிடக் கோரிக்கையை ஏற்பதாகவும், அவர் இனி சுவிட்சர்லாந்தில் வாழலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், எஸ்.வி.பி தேசிய கவுன்சிலர் Roland Rino Büchel இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன்,

சுவிஸ் மக்கள் இனி ஒரு தீவிரவாதியுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதே வேளை, ஜி.எல்.பி தேசிய கவுன்சிலர் Beat Flach இந்த முடிவை வரவேற்றுள்ளதுடன், நாம் அந்த நபரை நாட்டைவிட்டு வெளியேற்றி தற்போதைய சூழலில் ஈராக் நாட்டுக்கு அனுப்பினால்,

அவர் சித்திரவதை மற்றும் மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இந்த விவகாரத்தில் நாம் ஒரு அரசியலமைப்பு சார்ந்த அரசு என்பதில் பெருமைப்படுகிறேன் என்றார் அவர்.

வெசாம் ஒரு ஆபத்தான நபர், நமது சமூகத்திற்கு அவர் அச்சுறுத்தலாக உள்ளார் என்றால், கண்காணிக்கப்படட்டும், அவர் ஆபத்தானவர் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும் எனவும் Flach வாதிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்