சுவிட்சர்லாந்து விதியில் புதிய மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தின் மத்திய குழு, குழந்தைகளுக்கான நுழைவு விதிகளை தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறையில் உள்ள நுழைவு விதியில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் போது கட்டாய கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற விதியிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

கூடுதலாக, வணிக காரணங்களுக்காக சுவிட்சர்லாந்தில் சில நாட்கள் மட்டுமே தங்கும் லொறி ஓட்டுநர்கள் போன்றவர்கள் நுழைவு படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை.

அதுமட்டுமின்றி, பி.சி.ஆர் சோதனைகளுக்கு கூடுதலாக விரைவான antigen சோதனைகளும் இப்போது நுழைவதற்கான சோதனை ஆதாரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்