ஆப்பிள் கடிகாரங்களில் மீண்டும் Walkie Talkie வசதி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் iOS, Watch OS மற்றும் HomePod என்பவற்றிற்கான மென்பொருள் அப்டேட் ஒன்றினை வெளியிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் ஆப்பிள் கடிகாரங்களில் மீண்டும் Walkie Talkie வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் மிகப்பெரிய குறைபாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அதாவது இத்தொழில்நுட்பத்தின் மூலம் உரையாடுவது iPhone உதவியுடன் ஒட்டுக்கேக்ககூடியதாக இருந்தது.

எனவே குறித்த வசதி சில காலம் நீக்கப்பட்டிருந்தது.

தற்போது குறித்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்