யூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

பல தெரியாக விடயங்களை அறிந்துகொள்வதற்கு யூடியூப் வீடியோ தளமானது இன்று பெரிதும் உதவிகரமானதாக இருக்கின்றது.

இத்தளத்தில் உள்ள உதவியுடன் பெண் ஒருவர் பெற்ற பேரதிர்ஷ்டம் தொடர்பில் தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது வைரத்தினை எப்படி அடையாளம் காண்பது எனும் வீடியோவினை யூடியூப் தளத்தில் பார்வையிட்டுள்ள பெண் அதன் பின்னர் நிஜமாகவே விலையுயர்ந்த வைரம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளார்.

இவர் கண்டுபிடித்த மஞ்சள் நிற வைரமானது 3.72 கரட் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர் குறித்த வைரத்தை கண்டுபிடித்த Arkansas பகுதியில் ஏற்கணவே இரு முறை வெவ்வேறு நபர்கள் வைரங்களை கண்டெடுத்துள்ளனர்.

36 வயதான ஆண் ஒருவர் கடந்த வருடம் 2.12 கரட் உள்ள வைரத்தினையும், மற்றொருவர் 1.52 கரட் உடைய வைரத்தினையும் இப் பகுதியில் கண்டெடுத்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers