என் மீது குற்றம் சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை: ரபேல் நடால் காட்டம்

Report Print Fathima Fathima in ரெனிஸ்
186Shares
186Shares
ibctamil.com

நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ரபேல் நடால் பிரான்சின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு ரபேல் நடால் கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, அப்போதைய அமைச்சரான ரோஸ்லீன் பச்லெட் கருத்து தெரிவித்தார்.

அதாவது, நடால் ஊக்கமருந்து சோதனையிலிருந்து தப்பிக்கவே காயம் என பொய் கூறுவதாக கூறினார்.

அமைச்சரின் இந்த கருத்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், அதற்கு நஷ்ட ஈடாக 1,18,000 டொலர் வழங்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகாத காரணத்தினால், வருகிற நவம்பர் 16ம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நடால் கருத்து தெரிவிக்கையில், எவ்வித ஆதாரமும் இல்லாமல் ரோஸ்லீன் பச்செலட் கருத்து கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நான் இதுவரையிலும் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தது இல்லை, இதுபோன்று குற்றம் சாட்டினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்