இந்தியாவின் சுற்றுலா சொர்க்கம் என்றழைக்கப்படும் அழகிய லடாக்கின் சிறப்பம்சங்கள்

Report Print Jayapradha in சுற்றுலா

இந்தியாவில் பலரும் செல்ல விரும்பும் சுற்றுலாத்தளங்களில் மிகவும் முக்கியமானதாக லடாக் உள்ளது.

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில் கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக்.

இங்கு அழகிய ஏரிகளும் மடங்களும் மதி மயக்கும் இயற்கை காட்சிகளும் மலை உச்சிகளும் இந்த இடத்தின் சில முக்கிய ஈர்ப்புகள் ஆகும்.

லடாக் அமைதியை விரும்பும் ஒரு பகுதியாக கருதப்பட்டாலும் இங்கு மதம் மாறி திருமணம் செய்வது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

லடாக்கில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் என்றால் அவை நுப்ரா பள்ளத்தாக்கு, கர்டுங் லா, ரோஹ்டங் கணவாய், திக்சீ புத்த மடாலயம், காந்த மலை, சாந்தி ஸ்துபா போன்ற இடங்கள் தான்.

லடாக்கில் உள்ள மேக்னடிக் ஹில் மிகவும் பிரபலமானது. இங்கு நீங்கள் உங்கள் காரை நிறுத்தினாலும் ஜன்னலில் பார்க்கும்போது இடம் நகர்ந்து செல்வதைப் போலத் தோன்றும்.

லடாக்கில் உள்ள அரச மாளிகை மிகவும் பிரசித்தி பெற்றது. இது கிபி 1600 ஆம் ஆண்டு செங்கி நாம்கியாய் என்பவரால் கட்டப்பட்டது.

இங்குள்ள டிரக் ஒயிட் லோட்டஸ் பள்ளி, திபெத்திலேயே மிகவும் பிரபலமான பள்ளிக்கூடமாகும். இதில் பல நூறு மாணவர்கள் படிக்கின்றனர்.

லடாக்கில் உள்ள துருக்பா நன்னேறியில் உள்ள மூதாட்டிகள், பஜாமாக்களை அணிந்து கொண்டு, நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவார்கள்.

சியாச்சென் ராணுவத்தளமானது ஓபி பாபா மடம் என்று அழைக்கப்படுகிறது. மாவ்லன் தாக்குதலை ஒரே ஆளாக நின்று சமாளித்த ஓபி பாபா என்ற வீரரின் நினைவாக அப்பெயர் வழங்கப்படுகிறது.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers