லண்டனில் கண்மூடித்தனமாக கார்கள் மீது மோதிய பேருந்து!

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது தொடர்ந்து மோதிய படியே சென்றதில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Ten Ten Kitchen அருகே உள்ள Lower Clapton சாலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 4.30 மணியளவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென அங்கு நின்று கொண்டிருந்த கார்களை தொடர்ந்து முட்டியபடி கண்மூடித்தனமாக சென்றுள்ளது.

இதில் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்ததும் விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் பேருந்தை இயக்கிய ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், இதுவரையிலும் யாரையும் கைது செய்யவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது, பேருந்தின் உள்ளே இருந்த பெண் ஒருவர் உயிர் பயத்தில் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்