டிரம்ப் செய்தது தவறுதான்: பிரதமர் தெரேசா மே

Report Print Fathima Fathima in பிரித்தானியா
260Shares
260Shares
lankasrimarket.com

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டுவிட்டரில் வலதுசாரி வீடியோக்களை பகிர்ந்தது தவறு தான் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் வலதுசாரி தலைவரான ப்ரான்சென் பதிவிட்ட இஸ்லாமிய வன்முறையாளர்கள் வீடியோவை டிரம்ப் ரீடுவிட் செய்திருந்தார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியே இவ்வாறு நடப்பது அழகல்ல என பிரதமர் தெரேசா மேவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு, என் மீது கவனம் செலுத்த வேண்டாம், பிரித்தானியாவுக்குள் நடந்து வரும் அழிவுகரமான இஸ்லாமிய தீவிரவாதத்தில் கவனம் செலுத்துங்கள் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் தெரேசா மே, டிரம்ப் செய்தது தவறு தான்.

நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறோம் என்பதற்காக, அமெரிக்கா ஏதேனும் தவறாக புரிந்து கொள்ளும் போது பேசாமல் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள சிறப்பு உறவை சுட்டிக்காட்டிய தெரேசா மே, இது தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் தெரேசா மே அடுத்தாண்டுக்கான அமெரிக்க பயணத்தை ரத்து செய்யவேண்டுமென ஸ்காட்லாந்து முதல் மந்திரி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்